சினிமா
செம்ம ஹாட்டு மச்சி..அல்வா சீன் எடுக்கும் போது அம்மா ஷூட்டிங்ல இருந்தாங்க!! நடிகை கஸ்தூரி..
செம்ம ஹாட்டு மச்சி..அல்வா சீன் எடுக்கும் போது அம்மா ஷூட்டிங்ல இருந்தாங்க!! நடிகை கஸ்தூரி..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முக்கிய நடிகையாக இருந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை கஸ்தூரி, திருமணமாகி 2 குழந்தைகள் பெற்று வெளிநாட்டில் செட்டிலானார். அதன்பின் மீண்டும் தமிழ் படங்களிலும் சீரியலிலும் நடிக்க ஆரம்பித்தார்.அரசியலிலும் ஈடுபட்டு வரும் நடிகை கஸ்தூரி, தன் மகள் 7 வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக கூறியிருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அமைதிப்படை படத்தில் அல்வா சீனில் சத்யராஜுடன் நடித்த கிளாமர் காட்சியில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார்.அதில், ஷூட்டிங்கின் போது, கணவர் – மனைவி போல் தான் மணிவண்ணன் – சத்யராஜ் இருப்பாங்க. மணிவண்ணன். அல்வான்னு சொல்லும் விதம் மணிவண்ணன் கத்துக்கொடுத்தை அப்படியே சத்யராஜ் செய்தார். என் அம்மா ஷூட்டிங்கில் கேமரா பக்கத்தில் தான் உட்கார்ந்திருந்தாங்க.அவங்க (மணிவண்ணன் – சத்யராஜ்) செய்வதை பார்த்துவிட்டு, நீ கண்ண மூடிட்டு உட்கார்ந்திருந்த, அவங்க ரெண்டு பேரும் அப்படி பண்றாங்கன்னு வியந்து பேசுனாங்க. எனக்கு அந்த சீனில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.பெரிய ஸ்கிரீனில் வரும்போது என் நடிப்பு நல்லா இருந்தது. என் நடிப்பு நல்ல இருந்தது, அதனால அது ஹாட்-ஆ இருந்தது, ராஜா சார் இசைக்கும், கேமரா மெதுவா கோரப்புல் மீதே வந்து ஜூம் ஆவுறதுக்கும் செம்ம ஹாட்டு மச்சி. சினிமாவின் மேஜிக் அப்போது தான் நான் புரிந்துக்கொண்டேன் என்று கஸ்தூரி வெட்கத்துடன் பகிர்ந்துள்ளார்.