இலங்கை

பேசாலையில் விரைவில் துறைமுகம் நிர்மாணம்; மன்னாரில் கற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு!

Published

on

Loading

பேசாலையில் விரைவில் துறைமுகம் நிர்மாணம்; மன்னாரில் கற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு!

மன்னார் மாவட்டத்துக்குரிய துறைககம் பேசாலையில் விரைவில் அமையவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
 

Advertisement

அவர் மேலும் தெரிவிக்கையில்:- மன்னார் மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து. அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கத் தீர்வுகள் எட்டப்பட்டன. கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது பற்றியும் பேசப்பட்டது. அதற்குரியநட வடிக்கையை கடற்படையினர் எடுப்பார்கள். மன்னார் மாவட்டத்துக்கென துறைமுகமொன்றுகிடையாது. எனவே, பேசாலையில் துறைமுகமொன்றை அமைப்பதற்குத் திட்டமிட்டு, அதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது.

அதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுத்துநிறுத்துமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை முற்றுமுழுதாக நிறுத்தமுடியும் – என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version