இலங்கை

வோல்கர் டர்க் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படக் கூடாது

Published

on

வோல்கர் டர்க் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படக் கூடாது

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படக் கூடாது என பத்தரமுல்ல சீலரதன தேரர் தெரிவித்துள்ளார்.

காஸா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போர் இடம்பெற்று வரும் நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் எதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடுகளுக்கு டர்க் ஏன் விஜயம் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு மட்டும் அவர் விஜயம் செய்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

தெற்கில் காணப்படும் மனித புதைகுழிகள் பார்க்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

யாழ்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் சந்திரசேகரனை துரத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வோல்கர் டர்க்கின் விஜயம் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளுக்காக மேற்கொள்ளப்படுவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பத்தரமுல்லே சீலரதன தேரர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version