வணிகம்

Gold Rate Today, 24 June: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இல்லத்தரசிகள் ஹாப்பி!

Published

on

Loading

Gold Rate Today, 24 June: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இல்லத்தரசிகள் ஹாப்பி!

Gold and Silver Price Today in Chennai: ஈரான் – இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிகழ்வுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் சூழலிலும், தங்கத்தின் விலை குறைந்துள்ளது பொதுமக்கள் இடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் விற்பனையாகும் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம். Gold Rate: 24 கேரட் தூய தங்கம்: நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 93 ரூபாயும், ஒரு சவரனுக்கு 744 ரூபாயும் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ. 9,802-க்கு, 8 கிராம் ரூ. 78,416 விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம்: ஆபரணத் தங்கமான 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 85 ரூபாயும், ஒரு சவரனுக்கு 680 ரூபாயும் சரிந்துள்ளது. அந்த வகையில், ஒரு கிராம் ரூ. 8,985 எனவும், எட்டு கிராம் ரூ. 71,880 என்றும் விற்பனை ஆகிறது. வெள்ளியை பொறுத்த வரை இன்று ஒரு கிராம் ரூ. 117.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை நேற்று ரூ. 118 ஆக இருந்தது. அதிக அளவில் தங்கம் விலை சரிவை சந்திக்கவில்லை என்றாலும், இது தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் இடையே நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version