இலங்கை

கால்சிய கல்லாக மாறிய சிசு; 75 வயது பெண்ணின் CT SCAN ஆல் மருத்துவர்கள் அதிர்ச்சி

Published

on

கால்சிய கல்லாக மாறிய சிசு; 75 வயது பெண்ணின் CT SCAN ஆல் மருத்துவர்கள் அதிர்ச்சி

   அல்ஜீரியாவை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவரின் வயிற்றில், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிசு ஒன்று, கால்சிய கல்லாக மாறியிருந்தது, மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

75 வயது மூதாட்டி ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அந்த மூதாட்டிக்கு மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்தபோதுதான், அவர் வயிற்றில் இறந்து கல்லாக மாறிய சிசு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அவரது வயிற்றில், சுமார் 7 மாதம் வரை உயிருடன் இருந்து இறந்த சிசு ஒன்று, கல் போல் மாறியிருப்பதை கண்டறிந்தனர்.

கருப்பைக்கு வெளியே கர்ப்பம் தரித்து, ரத்த ஓட்டம் கிடைக்காததால் சிசு இறந்துவிடுகிறது.

உடல் தனது இயற்கையான பாதுகாப்பு சக்திகளை பயன்படுத்தி, இறந்த சிசுவை கால்சியமாக மாற்றி, கல் போல ஆக்கிவிடுகிறது. இதனால் தாயின் உடல்நிலை பாதிக்கப்படாமல் தடுக்கப்படுகிறது.

Advertisement

இது உடலின் அற்புதமான தற்காப்பு முறையை வெளிப்படுத்தும் ஒரு சான்றாகும்.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் மிகவும் அரிதானவை என கூறும் நிபுணர்கள், கடந்த 2013ஆம் ஆண்டு கொலம்பியாவில் ஒரு மூதாட்டியின் வயிற்றில் 40 ஆண்டுகளாக இருந்த ‘கல்லாய் மாறிய குழந்தை’ கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version