உலகம்

தெஹ்ரானில் இறுதி ஊர்வலத்திற்காக ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கானோர்

Published

on

தெஹ்ரானில் இறுதி ஊர்வலத்திற்காக ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கானோர்

ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13ந்தேதி திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. 100கும் மேற்பட்ட இடங்களை இலக்காக கொண்டு, ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதில், ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். 

Advertisement

30க்கும் மேற்பட்ட மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், 11 மூத்த அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் உள்ளிட்டோரின் இறுதி ஊர்வலம் நடந்தது.

தெஹ்ரானில் உள்ள ஆசாதி சதுக்கத்தில் அவர்களுடைய புகைப்படங்கள் மற்றும் தேசிய கொடிகளுடன் சவப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டன. இறுதி ஊர்வலத்தில் ஈரான் ஜனாதிபதி மன்சூர் பெஜஸ்கியான் மற்றும் புரட்சி படையின் தலைவர் குவானி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதேபோன்று, நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கானோரும் கலந்து கொண்டனர். அவர்கள் கொடிகளை அசைத்தபடி காணப்பட்டனர். ஒரு சிலர் சவப்பெட்டியின் அருகே சென்று தொட்டு விட்டு வந்தனர். சிலர் ரோஜா இதழ்களை தூவினர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version