இலங்கை

யாழ் செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்

Published

on

யாழ் செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்

  யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் நடைபெற்றது.

Advertisement

லண்டனை தளமாக கொண்டு இயங்கும் அமைப்பொன்றினால் நேற்று (27)இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.

“அணையா விளக்கு” போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சர்வதேச நீதி விசாரணையே தமிழ் மக்களின் ஏகோபித்த கோரிக்கை என்பதை வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் சர்வதேச நாடுகளின் தலைமையில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version