இலங்கை

விசா செல்லுபடிக் காலத்தை நீடித்த இஸ்ரேல்

Published

on

விசா செல்லுபடிக் காலத்தை நீடித்த இஸ்ரேல்

  இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்பார்ப்புடன் மறு நுழைவு விசாவில் இலங்கைக்கு வருகைதந்தோரின் மறு நுழைவு விசா செல்லுபடியாகும் காலத்தை இஸ்ரேல் நீடித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு இஸ்ரேல் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

Advertisement

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாகவே இஸ்ரேல் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபையினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் இருந்து மறு நுழைவு விசாவில் இலங்கைக்கு வருகைதந்தவர்கள், மறு நுழைவு விசா காலாவதியான பின்னரும் எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரையான நீடிக்கப்பட்ட காலப்பகுதியில் இஸ்ரேலுக்குத் திரும்புவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version