சினிமா

38 வயதில் நடிகை இலியானாவுக்கு பிறந்த 2 – வது குழந்தை.. குவியும் வாழ்த்து!

Published

on

38 வயதில் நடிகை இலியானாவுக்கு பிறந்த 2 – வது குழந்தை.. குவியும் வாழ்த்து!

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இலியானா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இதன்பின் தமிழ் பக்கம் தலைகாட்டாத இலியானா தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.2012ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தின் மூலம் தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற இலியானா தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2023ம் ஆண்டு மைக்கேல் டோலன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு கடந்த வருடம் மகன் பிறந்த நிலையில் மீண்டும் இலியானா கர்ப்பமானார்.இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் நடிகை இலியானா. தனது மகன் போட்டோவை பகிர்ந்து அவரது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version