டி.வி

பக்தி சூப்பர் சிங்கரில் முருகன் ராப் பாடல்!! அசத்திய ராப் பாடகர் Kelithee..

Published

on

பக்தி சூப்பர் சிங்கரில் முருகன் ராப் பாடல்!! அசத்திய ராப் பாடகர் Kelithee..

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் பக்தி சூப்பர் சிங்கர் ஆரம்பிக்கப்பட்டு ஒளிப்பரப்பாகி வருகிறது. பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம், விஜே அக்ஷதா தாஸ் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.பிரம்மாண்ட பக்தி குரலுக்கான தேடலை மையப்படுத்தி ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில், இந்த வாரம் முருகன் பாடலை பாட சமீபத்தில் பிரபலமான Kelithee என்ற ராப் பாடகர் கலந்து கொண்டிருக்கிறார்.முருகன் பக்தரான கெலிதி, சில வாரங்களுக்கு முன் வெற்றிவேல் என்ற ஆல்பம் பாடலை ரிலீஸ் செய்திருக்கிறார். தற்போது பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த பாடலை பாடி அசத்தி இருக்கிறார். அதன் பிரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version