சினிமா

அஜித் – ஆதிக் படத்தை எடுக்க மறுக்கும் தயாரிப்பாளர்கள் ..! காரணம் என்ன?

Published

on

அஜித் – ஆதிக் படத்தை எடுக்க மறுக்கும் தயாரிப்பாளர்கள் ..! காரணம் என்ன?

சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகிய “குட் பேட் அக்லி ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கேர்ஸ் தயாரித்து இருந்தது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தது மேலும் இந்த படத்திற்கு அஜித் 180 கோடி சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் தற்போது படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக இயக்குநர் ags ,சண் பிக்சர்ஸ் ,மைத்திரி மூவி மேக்கேர்ஸ் என பல தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லியும் சம்பளம் உயர்வாக இருப்பதனால் மறுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும் தற்போது மைத்திரி மூவி மேக்கேர்ஸ் அஜித்தின் சம்பளத்தை 130 கோடியாக குறைத்தால் படத்தை தயாரிப்பதற்கு சம்மதம் தெரிவிப்பதாக கூறியுள்ளனர். இது தொடர்பில் தற்போது அஜித் தரப்பில் பேச்சு வார்த்தை இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version