சினிமா

அது போதைப்பொருள் என்றால், டாஸ்மாக்கில் விற்பது என்ன?.. வெளுத்து வாங்கிய ரஞ்சித்

Published

on

அது போதைப்பொருள் என்றால், டாஸ்மாக்கில் விற்பது என்ன?.. வெளுத்து வாங்கிய ரஞ்சித்

தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பின் உச்சமாக பேசப்படும் விஷயம் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பிரபலங்கள் சிக்கியது தான்.நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியதை அவரே ஒப்புக்கொண்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அதை தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணா தலைமறைவாக இருந்த நிலையில் அவரை தேடிப்பிடித்து மருத்துவ பரிசோதனை எல்லாம் செய்துள்ளனர். அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது.இந்நிலையில், நடிகர் ரஞ்சித் இந்த விவகாரம் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில், “இந்தியா போன்ற நாட்டில் போதைப் பொருட்கள் வளர்ந்து கொண்டு வருவது பேராபத்து, போதையால் ஒரு குடும்பமே அழிந்துவிடும், இதனால் வம்சமே இல்லாமல் போய்விடும்.கொக்கைன் மட்டும்தான் போதைப் பொருளா? தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக்கில் சத்து டானிக்கா விற்று கொண்டிருக்கிறார்கள். அதை தினமும் வாங்கிக் குடித்தால் உடலுக்கு நல்லதா? அதுவும் போதைதானே? போதை என்பது பேராபத்தானது” என்று தெரிவித்துள்ளார்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version