இலங்கை
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்வது சட்டவிரோதமான செயலாகும்.
எனவே, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு அளிக்க முடியும்.
ஒரு கிலோ பச்சை அரிசி 220 ரூபாவாகவும் ஒரு கிலோ சிவப்பு நாடு அரிசி 230 ரூபாவாகவும் ஒரு கிலோ கீரி சம்பா பச்சை அரிசி 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.