இலங்கை

அலுவலக ஊழியர் செய்த கொடூர சம்பவம் ; படுகொலை செய்யப்பட்ட இளைஞன்

Published

on

அலுவலக ஊழியர் செய்த கொடூர சம்பவம் ; படுகொலை செய்யப்பட்ட இளைஞன்

களுத்துறையில் மொரொன்துடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனதுவ, கவடயாகொடை பிரதேசத்தில் சக ஊழியரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரொன்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று  (30) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

கொலைசெய்யப்பட்டவர் புத்தளம் – லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஆவார்.

அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியருக்கும் இளைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைதுசெய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

கொலைசெய்யப்பட்ட இளைஞனின் சடலம் மொரொன்துடுவ கோனதுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரொன்துடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version