இந்தியா
என்.ஆர்.காங்கிரசை பா.ஜ.க-விடம் அடமானம் வைத்த ரங்கசாமி: நாராயணசாமி கடும் சாடல்
என்.ஆர்.காங்கிரசை பா.ஜ.க-விடம் அடமானம் வைத்த ரங்கசாமி: நாராயணசாமி கடும் சாடல்
முதலமைச்சர் ரங்கசாமி பா.ஜ.க.விடம் தனது என்.அர் காங்கிரஸ் கட்சியை அடமானம் வைத்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார். புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.வில் பணம் இல்லாமல் பதவி கிடைக்காது என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. அங்கே மத்தியிலே மத்தியில் நரேந்திர மோடி அதானிக்கும் அம்பானிக்கும் பிரதமராக இருப்பது போல் புதுச்சேரி பா.ஜ.க. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்களின் கட்சி அடமானம் வைத்துள்ளது. என் ஆர் காங்கிரஸ் கட்சியை முதலமைச்சர் ரங்கசாமி பாஜகவிடம் அடமானம் வைத்துள்ளதாக அக்கட்சியின் பொறுப்பாளர்கள் பேசி வருகின்றனர். கோயில் சொத்தை அபகரிப்பவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளது பாஜக இதிலிருந்து அவர்கள் ரெட்டை வேடம் போடுவது தெரிந்துள்ளது என்றார்.