இந்தியா
ஏசி, ஸ்லீப்பர், 2-ம் வகுப்பு: நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு அமல்; புதிய கட்டணம் எவ்வளவு?
ஏசி, ஸ்லீப்பர், 2-ம் வகுப்பு: நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு அமல்; புதிய கட்டணம் எவ்வளவு?
இந்திய ரயில்வே, 5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏசி, ஸ்லீப்பர் மற்றும் 2-ம் வகுப்பு ரயில் கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள் இன்று முதல் (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளன.புதிய கட்டண உயர்வு விவரங்கள்:ரயில்வே அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ஏசி வகுப்பு (முதல் வகுப்பு, 2-அடுக்கு, 3-அடுக்கு மற்றும் சேர் கார்) கட்டணங்கள் கிலோமீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளன. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள ஏசி அல்லாத வகுப்புகளுக்கு (ஸ்லீப்பர் வகுப்பு, இரண்டாம் வகுப்பு (பொது) மற்றும் முதல் வகுப்பு), கட்டண உயர்வு கிலோமீட்டருக்கு 1 பைசா ஆகும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கபுறநகர் ரயில் கட்டணங்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளில் மாற்றம் இல்லை. இதன் மூலம், ஏசி வகுப்பில் 1,000 கி.மீ. பயணம் செய்பவர்கள் ரூ.20 கூடுதலாகவும், ஸ்லீப்பர் (அ) பொதுப் பெட்டியில் மெயில்/எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்பவர்கள் ரூ.10 கூடுதலாகவும் செலுத்த வேண்டும்.சாதாரண ரயில்களில் 2-ம் வகுப்பு அல்லது பொது வகுப்பிற்கான கட்டணம்:சாதாரண ரயில்களில் 2-ம் வகுப்பு அல்லது பொது வகுப்பிற்கு, 500 கி.மீ. வரை கட்டண உயர்வு இல்லை. அதற்கு மேல், 501 கி.மீ. முதல் 1,500 கி.மீ. வரையிலான தூரங்களுக்கு 5 ரூபாயும் 1,501 கி.மீ. முதல் 2,500 கி.மீ. வரையிலான தூரங்களுக்கு 10 ரூபாயும் மற்றும் 2,501 கி.மீ. முதல் 3,000 கி.மீ. வரையிலான தூரங்களுக்கு 15 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள்:ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு பயணம் செய்வதற்காக ஏற்கனவே டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு பழைய கட்டணமே பொருந்தும். ஆனால், ஜூலை 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு ரயில்கள்/நிலையங்களில் புதிதாக வழங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே திருத்தப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படும். முன்பதிவுக் கட்டணம், சூப்பர்ஃபாஸ்ட் கூடுதல் கட்டணம் போன்ற பிற கூடுதல் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.வருவாய் மற்றும் நிதிநிலை:இந்தக் கட்டண உயர்வு மூலம் நடப்பு நிதியாண்டில் (2025-26) ரயில்வேக்கு ரூ.1,100 கோடிக்கு மேல் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு நிதியாண்டுக்கும் இந்த வருவாய் ரூ.1,450 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரயில்வே தனது வருவாயில் பெரும் பகுதியை (சுமார் 65%) சரக்கு போக்குவரத்தில் இருந்தே பெறுகிறது. பயணிகள் பிரிவு சுமார் 30% பங்களிக்கிறது. ரயில்வே பயணிகள் சேவைகளுக்கு அதிக மானியம் அளிக்கிறது. ஏசி அல்லாத சேவைகள் அவற்றின் செலவுகளில் 39% மட்டுமே மீட்டெடுக்கின்றன.ரயில்வேயின் கணிப்புப்படி, 2026 நிதியாண்டில் பயணிகள் பிரிவில் இருந்து எதிர்பார்க்கப்படும் மொத்த வருவாய் ரூ. 92,800 கோடி ஆகும். 2025 நிதியாண்டில், 736 கோடிக்கும் அதிகமானோர் ரயில்களில் பயணித்தபோது, மொத்த பயணிகள் வருவாய் ரூ. 75,215 கோடியாக இருந்தது. கடந்த ஜனவரி 2020-ல் பயணிகள் கட்டணம் கடைசியாக திருத்தப்பட்டது. அப்போது மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத வகுப்புகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசா மற்றும் ஏசி வகுப்புகளுக்கு 4 பைசா உயர்த்தப்பட்டது. சாதாரண ஏசி அல்லாத வகுப்புகளுக்கு கிலோமீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டது. ரயில்வே பயணிகள் சேவைகளுக்கு அதிக மானியம் அளிக்கிறது. நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின்படி, புறநகர் சேவைகள் அவற்றின் செலவுகளில் சுமார் 30% மீட்டெடுக்கின்றன, மேலும் ஏசி அல்லாத சேவைகள் 39% மீட்டெடுக்கின்றன. இந்தக் கட்டண உயர்வு குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் எழுந்துள்ளன. சில அரசியல் கட்சிகள் இந்தக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.