இலங்கை

குற்றத்தை ஒப்புக்கொண்ட குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர்; தண்டனை திகதி அறிவிப்பு

Published

on

குற்றத்தை ஒப்புக்கொண்ட குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர்; தண்டனை திகதி அறிவிப்பு

  இணையவழி விசா (e-Visa) முறைமையை இடைநிறுத்தல் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இன்று (1) உயர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதனையடுத்து, ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கான தண்டனை ஜூலை 24ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisement

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, இணையவழி விசா முறைமையை இடைநிறுத்தி வைக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version