சினிமா

சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் பாலாவின்…!தனது பிறந்த நாளில் செய்த சமூக பணி…!

Published

on

சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் பாலாவின்…!தனது பிறந்த நாளில் செய்த சமூக பணி…!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வருகை புரிந்து, இன்று நகைச்சுவை நடிகராக தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. வெறும் ஒரு நடிகராக மட்டுமின்றி, அவர் தனது சம்பாதிப்பில் ஒரு பகுதியை சமூக நலத்திட்டங்களுக்கு வழங்கி வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வெறும் சினிமா நடிப்பை தாண்டி, அவருடைய மனிதநேயம் பாராட்டத்தக்கதாக இருக்கிறது.நடிகர் பாலா, திரை உலகில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை பொதுமக்கள் நலத்துக்காக செலவழிக்கிறார். இதுவரை அவர் செய்த உதவிகளில், ஆம்புலன்ஸ் ஒன்று நன்கொடை அளித்தது, பெட்ரோல் பங்க் ஊழியருக்குப் பைக் வாங்கி கொடுத்தது, தனி நபர்களுக்குச் சிகிச்சை செலவுகளை உதவியது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதனை தொடர்ந்து, சமீபத்தில் அவர் செய்த மனிதநேய செயல், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஓடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு “சிறுமிக்கு வீடு கட்டித் கொடுத்துள்ள்ளார் .  இது ஒரு சாதாரண உதவி அல்ல,அவரது பிறந்தநாளில்  தனது சொந்த பணத்தில் செய்து முடித்த சமூக பணி ஆகும்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாலா, “இரண்டு மாசத்துக்கு முன்னாடி அந்த பாப்பாவை முதுகு தண்டுப் பிரச்சனைக்காக பார்ப்பதற்காகவே வந்திருந்தோம். ஆனா, அதே நேரம் அவருடைய வீட்டு சூழ்நிலையும் மிகவும் கடுமையாக இருந்தது. வீடே இல்லாமல், சுருக்கமான இடத்தில் மிகவும் சிரமப்படுத்து வாழ்ந்ததை பார்த்ததும், நாமே அந்த வீட்டை கட்டித் தரக்கணும்னு முடிவு பண்ணோம்,” என்று கூறினார்.“மூணு மாசத்துல கட்டித் தருவோம்’னு சொன்னோம், ஆனா இரண்டு மாசத்துக்குள்ளேயே அந்த புது வீட்டு வேலை முடிச்சு, அவரை சொந்த வீட்டு வாயிலில் நிற்பது எனக்கு ஒரு பெரிய சந்தோஷமா இருக்கு. இது என் பிறந்த நாளில் செய்த கடமை இல்ல. இது ஒரு உரிமை. நான் பண்ண வேண்டிய விஷயம் என்று தான் நினைக்கிறேன்,” என்று உணர்வோடு கூறினார்.நடிகர் பாலா தனது நடிப்பால் மட்டுமின்றி, தனது சமூகப் பங்களிப்பாலும் இன்று மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இவர் தொடங்கிய நற்கதைகள், தமிழ் சினிமாவில் ஒரு புதிய பார்வையை உருவாக்கும் வகையில் இருக்கிறது. தற்போது இவர் ‘காந்தி கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக நடிப்பதன்  மூலம் நடிப்பிலும் ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி நகர்கிறார் என்று குறை முடியும். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version