இலங்கை

செம்மணி படுகொலைகள் ; நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவால் தலைமறைவான இராணுவ தளபதிகள்!

Published

on

செம்மணி படுகொலைகள் ; நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவால் தலைமறைவான இராணுவ தளபதிகள்!

1995, 1996 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளிடம் இருந்து அரச படையினரால் மீட்கப்பட்ட யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலைகள் செய்யப்பட்டவர்கள் தற்போது எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செம்மணி படுகொலைகள் இடம்பெற்றபோது அப்போதைய இலங்கை ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உத்தரவின் பேரிலேயே இந்த படுகொலைகள் அரங்கேற்றப்பட்டிருந்தன.

Advertisement

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளை சந்திரிக்காவே பாதுகாத்திருந்தார்.

மாணவி கிருக்ஷாந்தி படுகொலை வழக்கு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தபோது சந்திரிக்கா அதனை மழுங்கடிக்க செய்த வரலாறும் உள்ளது.    

இந்நிலையில் உலகளவில் தற்போது பேசுபொருளாகியுள்ள செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச நீதியை இனியேனும் பெற்று தருமா? என ஏக்கத்தோடு காத்திருக்கின்றார்கள் ஈழத் தமிழர்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version