இலங்கை

ஜனாதிபதியாகும் எண்ணம் இல்லை; பிரதமர் ஹரிணி தெரிவிப்பு!

Published

on

ஜனாதிபதியாகும் எண்ணம் இல்லை; பிரதமர் ஹரிணி தெரிவிப்பு!

ஜனாதிபதியாகும் ஆசை இல்லை, எனக்கு வழங்கப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்துவைப்பதே எனது ஆசை என்று தெரிவித்துள்ளார் பிரதமர் ஹரிணி அமரசூரிய.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- 2030ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் எமக்குச் சவாலாக மாறமுடியாது. நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாஸவால் கூட இயலாது. எங்களைத் தோற்கடிப்பதாகவிருந்தால் எங்களைவிடவும் சிறந்த முறையில் வேலை செய்யக்கூடியவர்களால் மாத்திரமே முடியும்.

Advertisement

இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். அதை நாங்கள் செய்துகொண்டு போகிறோம். யாரும் இது வரை செய்யாத புதுமையான விதத்தில் நாட்டைக் கட்டியெழுப்புகிறோம். திருட்டுகள் ஒழிக்கப்பட வேண்டும். திருடர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கல்வி,பொருளாதாரம், உட்கட்டமைப்பு என அனைத்தும் முன்னேற்றம் காணவேண்டும்- என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version