சினிமா
திருப்புவனம் அஜித் குமார் வழக்கில் தீவிர விசாரணை தேவை..!விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு…!
திருப்புவனம் அஜித் குமார் வழக்கில் தீவிர விசாரணை தேவை..!விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு…!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் ‘தளபதி’ விஜய், தற்போது அரசியலிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், திருப்புவனம் காவல் நிலையத்தில் காவலர்களால் மோதப்பட்டு உயிரிழந்த அஜித் குமார் சம்பவத்துக்கான விசாரணையை உயர்நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தைப் பெற்ற நடிகர் விஜய், ரசிகர்கள் மத்தியில் வெறும் ஒரு நடிகராக அல்லாமல், சமூக அக்கறையுடன் செயல்படக்கூடிய தலைவர் என்ற மதிப்பையும் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, 2024ல் தனது அரசியல் கட்சி ‘தமிழக வெற்றி கழகம் (TVK) என்ற பெயரில் தொடங்கியுள்ளார். அரசியலில் கால் பதித்த பிறகு, இது விஜய் வெளியிட்டுள்ள முக்கியமான அரசியல் கருத்தாகும்.திருப்புவனம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். கடந்த மாதம், அங்குள்ள காவல் நிலையத்தில், ஒரு சாதாரண விசாரணைக்காக அழைக்கப்பட்ட அஜித் குமார் (வயது 28), காவலர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவர் மரணம் அடைந்தார். இது போலீசாரின் மீதான மீண்டும் ஒருமுறை கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது. மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு வரும் நிலையில், வழக்கை தவறான கோணத்தில் வழிநடத்தாதீர்கள் என்ற வகையில் சமூக நீதிக்காக குரல் கொடுத்துள்ள விஜய்யின் இந்தக் கருத்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் அந்த பதில் “திருப்புவனத்தில் காவல்துறையினரால் அஜித் குமார் என்பவர் காவல் நிலையத்திற்குள் மரணமடைந்தது வருத்தம் அளிக்கிறது. இது போன்ற காவல் கொடூரங்கள் முற்றிலும் வேரறுக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விரைந்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்!”இந்த பதிவுக்குப் பிறகு, விஜய்யின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பல சமூக ஆர்வலர்களும், அரசியல் விமர்சகர்களும் அவரின் துணிவான எண்ணத்திற்குத் துணைநிற்கின்றனர்.விஜயின் அரசியல் நுழைவு என்பது வெறும் ஒரு நடிகரின் அதிகாரபூர்வ அறிவிப்பாக மட்டும் இல்லாமல், சமூகத்துக்காக குரல் கொடுக்கும் ஒரு புதிய தலைவரின் தோற்றமாக கருதப்படுகிறது. திருப்புவனம் வழக்கில் அவர் எடுத்துள்ள இந்த உருப்படியான நிலைபாடு, அரசியல் நிர்வாகத்தில் அவரின் தீவிர அக்கறையையும், நேர்மையையும் வெளிப்படுத்துகிறது. என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.