இலங்கை
பூநகரியில் கோரவிபத்து; ஐந்து பேருக்கு படுகாயம்
பூநகரியில் கோரவிபத்து; ஐந்து பேருக்கு படுகாயம்
ஹைஏஸ், மோட்டார்சைக்கிள் எரிந்தழிந்தன
பூநகரி மன்னார் வீதியின் பூநகரி தம்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஹைஏஸ் வாகனமும். மோட்டார்சைக்கிளுமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இதன் போது மோட்டார்சைக்கிள் தீப்பற்றி எரிந்த நிலையில், அந்தத் தீ ஹைஏஸ் வாகனத்திலும் பரவியுள்ளது.இதில் மோட்டார்சைக்கிளில் பயணித்தவர்களும், ஹைஏஸ் வாகனத்தில் பயணித்தவர்களுமாக ஐந்து பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்