சினிமா
பொலீஸில் சிக்கிய நிதீஷ்.! அதிர்ச்சியில் பாக்கியா; பித்துப்பிடித்து நிற்கும் சுதாகர்!
பொலீஸில் சிக்கிய நிதீஷ்.! அதிர்ச்சியில் பாக்கியா; பித்துப்பிடித்து நிற்கும் சுதாகர்!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா நிதீஷ் தள்ளிவிட்டதை நினைத்து அழுதுகொண்டிருக்கிறார். அப்ப பாக்கியா இனியாவுக்கு போன் எடுத்து நாம போட்டிக்காக போயிருந்த ஹோட்டலில இருந்து வரச்சொல்லியிருக்காங்க என்கிறார். அதுக்கு இனியா உன் மேல நம்பிக்கை வைச்சு போய்ட்டு வா என்று பாக்கியாவப் பாத்துச் சொல்லுறார். இதனை அடுத்து இனியா கோபிக்கு போன் எடுத்து உங்களைப் பாக்கணும் போல இருக்கு office-க்கு வரமுடியுமா என்று கேட்கிறார்.இதனை அடுத்து கோபி office-க்கு போய் நிற்கிறார். பின் இனியா கோபியப் பாத்து இந்த தடவையும் நான் உங்கள வருத்தப்பட வைக்கிற மாதிரியான விஷயத்தை தான் டாடி சொல்லப்போறேன் என்கிறார். அதைக் கேட்ட உடனே கோபி ஏன் என்னாச்சு என்று கேட்கிறார். அதைத் தொடர்ந்து இனியா நிதீஷ் இண்டைக்கு என்கிட்ட கடுமையாக நடந்துகிட்டார் என்று சொல்லுறார்.அதைக் கேட்டவுடனே கோபி ரொம்பவே கோபப்படுறார். பின் இனியா அந்த வீட்டில இருக்கிற எல்லாருமே நடிச்சுக்கிட்டு தான் இருக்காங்க என்று சொல்லுறார். இதனைத் தொடர்ந்து பாக்கியா போட்டியில கலந்து கொள்ளுறதுக்காக ரெஸ்டாரெண்டுக்குப் போய் நிற்கிறார். அந்த ஹோட்டலில நிதீஷ் போதை பொருள் பாவிச்சிட்டு பொலீஸிட்ட மாட்டுப்பட்டிருக்கிறதைப் பார்த்த பாக்கியா ஷாக் ஆகுறார். பின் பொலீஸிட்ட போய் நிதீஷ் அப்புடிபட்ட ஆள் இல்ல என்று பாக்கியா சொல்லுறார். இதனைத் தொடர்ந்து பாக்கியா சுதாகருக்கு போன் எடுத்து நிதீஷை பொலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க என்று சொல்லுறார். அதுக்கு சுதாகர் அப்புடி எல்லாம் இருக்காது தப்பா அரெஸ்ட் பண்ணியிருப்பாங்க என்கிறார். பின் சுதாகர் தன்ர மனைவியை கூப்பிட்டு பேசிக்கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.