சினிமா

மனைவியின் பிரிவால் தினந்தோறும் குடித்தேன்.. ஓப்பனாக சொன்ன சூப்பர் ஸ்டார்

Published

on

மனைவியின் பிரிவால் தினந்தோறும் குடித்தேன்.. ஓப்பனாக சொன்ன சூப்பர் ஸ்டார்

பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிப்பிற்காக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகர் அமீர்கான். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர் நடிக்கும் படங்கள் சரியாக ஓடவில்லை.60வது வயதிலும் பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் கஜினி, லகான், தங்கல், பி.கே என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.மேலும், தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.இந்நிலையில், தனது முதல் மனைவி குறித்து அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” என் முதல் மனைவி ரீனா தத்தா என்னை விட்டு பிரிவதாக கூறி வெளியேறிய அன்று ஒரு பாட்டில் மது அருந்தினேன். அதன் பின் தொடர்ந்து ஒன்றரை வருடம் தினசரி குடித்தேன்.என்னால் தூங்கவே முடியவில்லை. அதிக மது குடித்ததால் சுயநினைவை இழந்தேன். என் உயிரை நானே மாய்த்துக் கொள்ள முயற்சி செய்தேன்” என்று தெரிவித்துள்ளார். தற்போது, அமீர்கான் அவரது நீண்டநாள் தோழியான கவுரி ஷிண்டேவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version