சினிமா

முத்துவின் முடிவால் பூரிப்பில் மீனா… பொங்கி வெடிக்கிற கோபத்தில் விஜயா! நடந்தது என்ன?

Published

on

முத்துவின் முடிவால் பூரிப்பில் மீனா… பொங்கி வெடிக்கிற கோபத்தில் விஜயா! நடந்தது என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அண்ணாமலை மீனாவைப் பாத்து ஏன் ரெண்டு நாளா உன்னோட முகம் வாட்டமாக இருக்கு என்று கேட்கிறார். மேலும் சீதா கல்யாணத்திற்கு முத்து சம்மதிக்கல அதுதானே உனக்கு கவலை என்று சொல்லுறார். அதுக்கு மீனா முத்து சம்மதம் சொன்னால் எல்லாம் நல்ல படியா முடியும் என்கிறார். அதுக்கு அண்ணாமலை முத்து இந்த விஷயத்தில ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறான் என்று தெரியல என்கிறார்.அதனை அடுத்து விஜயா முத்து மாப்பிளை பார்த்தாலும் ராஜபரம்பரையிலயா பார்க்கப் போறான் என்கிறார். அவனை மாதிரி ட்ரைவரை தான் பார்க்கப் போறான் என்று மீனாவைப் பாத்துச் சொல்லுறார். அதுக்கு அண்ணாமலை ஆமா நீ பெரிய ஜமீன் பரம்பரை என்கிறார். இதனை அடுத்து விஜயா மீனாவைப் பாத்து பேசாம உன்ர தங்கச்சியையும் அந்த பையனையும் வீட்ட விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க சொல்லு என்கிறார். அதைக் கேட்ட மீனா கோபப்படுறார். அதுக்கு அண்ணாமலை எதுக்கு இந்த மாதிரி எல்லாம் கதைக்கிற என்கிறார். இதனை தொடர்ந்து விஜயா ரவியும் ஸ்ருதியும் லவ் பண்ணப்போ இவள் தானே கல்யாணம் பண்ணிவைச்சா அது மட்டும் சரியா என்று கேட்கிறார். அதுக்கு ஸ்ருதி எங்க வீட்ட சம்மதித்தருந்தால் ஏன் நாங்க அப்புடி கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என்கிறார்.இதனை அடுத்து முத்து சீதாவைப் பாத்து நீ அருணை கல்யாணம் பண்ணிக்கிறதில சம்மதம் என்று சொல்லுறார். இதைக் கேட்டு வீட்டில இருக்கிற எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். பின் சீதாவோட அம்மா மீனாவுக்கு போன் எடுத்து முத்து கல்யாணத்திற்கு சம்மதிச்சிட்டார் என்று சொல்லுறார். அதைக் கேட்டு மீனாவும் சந்தோசப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version