இலங்கை

யாழில் நேர்ந்த துயரம் ; போதையில் கிணற்றில் தவறி விழுந்த குடும்பஸ்தர்

Published

on

யாழில் நேர்ந்த துயரம் ; போதையில் கிணற்றில் தவறி விழுந்த குடும்பஸ்தர்

யாழ்ப்பாணம் மானிப்பாய் தெற்கு பகுதியில், கசிப்பு அருந்திய நிலையில் கிணற்றருகே படுத்துறங்கிய 2 பிள்ளைகளின் தந்தையொருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மானிப்பாய் தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கணேசராசா சுபாகரன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றுமுன்தினம் (29) கசிப்பு குடித்துவிட்டு கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.

இவர் கடந்த 29ஆம் திகதி வீடு ஒன்றிற்கு சென்று சகிப்பு குடித்துள்ளார்.

Advertisement

பின்னர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் அந்த வீட்டுக்கு கசிப்பு குடிக்க சென்றுள்ளார்.

அந்த வீடு பூட்டியிருந்தது.

இந்நிலையில் குறித்த நபர் அந்த வீட்டுக்கு முன்னால் உள்ள பழைய கிணற்றுக்கு அருகாமையில் உறங்கியுள்ளார்.

Advertisement

இவ்வாறு உறங்கியவர் திடீரென கிணற்றினுள் விழுந்துள்ளார். பின்னர் உறவினர்கள் அவரை தேடியவேளை நேற்றையதினம் (30) கிணற்றில் சடலமாக காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version