இலங்கை
வாட்ஸ்அப் ஊடாக நிதி மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!
வாட்ஸ்அப் ஊடாக நிதி மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!
தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, வாட்ஸ்அப் கணக்குகள் திருடப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளை மீட்டெடுக்க http://support@whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் https://telligp.police.lk வழியாக காவல்துறை சைபர் குற்றப்பிரிவிலும் முறைப்பாடு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.