இலங்கை

வானத்திலிருந்து பொழிந்த டொலர் மழை ; அள்ளிச் சென்ற மக்கள்!

Published

on

வானத்திலிருந்து பொழிந்த டொலர் மழை ; அள்ளிச் சென்ற மக்கள்!

அமெரிக்காவின் டெட்ராய்டில் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்காக பணத்தைப் கீழே பொழிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நோயால் பாதிக்கப்பட்டு அகாலமரணமான உள்ளூர் கார் கழுவும் (car wash) உரிமையாளரான தோமஸ் எம்பவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான டொலர்களை மக்கள் செறிவாக உள்ள பகுதியில் அவரது உறவினர்கள் கொட்டியுள்ளனர்.

Advertisement

காலமாகிய தோமஸ், தான் உள்ளூர் மக்களிடம் இருந்து தான் சம்பாதித்த பணத்தை தான் இறந்த பின்னர் அவர்களுக்கே திரும்பச் செலுத்த வேண்டும் என இறுதி ஆசையாக இந்த கோரிக்கையை வைத்திருந்ததால் இவ்வாறு செய்யப்பட்டது என தெரியவருகிறது.

குறித்த நபர் மிகவும் இரக்கமுள்ளவர் எனவும் இந்தச் செயல் அவர் மக்கள் மீது வைத்த அன்பை காட்டுகிறது எனவும், அவரது இழப்பு தம்மை கவலையடைய வைப்பதாக நண்பர்கள் உறவினர்கள் தெரிவத்துள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version