இலங்கை
வெளிநாடு செல்வதற்காக தமிழ் இளைஞன் செய்த மோசமான செயல்!
வெளிநாடு செல்வதற்காக தமிழ் இளைஞன் செய்த மோசமான செயல்!
இங்கிலாந்தில் அடைக்கலம் கோருவதற்கான புதிய மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும், முல்லைத்தீவை சேர்ந்த ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மும்பைக்குச் செல்லவிருந்த 29 வயதான குறித்த முல்லைத்தீவு குடியிருப்பாளரிடம் இருந்து பிரான்ஸ் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் போலியான கடவுச்சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மும்பாய்க்கு பயணித்துள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற ஒருவரும், குறித்த முல்லைத்தீவு குடியிருப்பாளரும், மும்பாயில் சந்தித்து, போர்டிங் பாஸ் என்ற விமானத்தில் ஏறுவதற்கான ஆவணத்தை மாற்றிக்கொள்வதற்கான மோசடியை தாம் கண்டுபிடித்துள்ளதாக, குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் சிங்கப்பூருக்கும் இங்கிலாந்துக்கும் பயணிக்க திட்டமிட்டிருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.