சினிமா

ஹீரோயினாக அறிமுகமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் மகள்..!

Published

on

ஹீரோயினாக அறிமுகமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் மகள்..!

இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான மோகன்லால் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் . சமீபத்தில் அவருடைய நடிப்பில் வெளியான ‘எம்புரான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது.மோகன்லால்க்கு பிரணவ் மற்றும் விஸ்மயா என இரு பிள்ளைகள் உள்ளனர். பிரணவ் ஏற்கனவே நடிகராக அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது மகள் விஸ்மயாவும் சினிமாவில் களமிறங்க இருக்கிறார் என்ற தகவல் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தகவலின்படி ஜுட் ஆண்டனி இயக்கும் ‘துடக்கம்’ என்ற படத்தில் விஸ்மயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் மோகன்லால் தான் இந்தப் படத்தை தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து பொதுவாக குறைவாகவே சமூக வலைதளங்களில் காணப்படும் விஸ்மயா தற்போது உடல் எடையை குறைத்து மாறி ஒரு ஸ்லிம் லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரை பார்த்த ரசிகர்கள் “இது விஸ்மயாவா?”, “அடையாளமே தெரியலையே!” என ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதைவிட இவரது படத்தின் போஸ்ட்டர் ஒன்றும் வைரலாகி வருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version