இலங்கை

காணிகளை விடுவித்தால் பாதுகாப்புக்குக் குந்தகம்; சரத் வீரசேகர கொக்கரிப்பு

Published

on

காணிகளை விடுவித்தால் பாதுகாப்புக்குக் குந்தகம்; சரத் வீரசேகர கொக்கரிப்பு

வடக்கில் 95 சதவீதக் காணிகளை எமது ஆட்சியின்கீழ் வடக்கில்த்துவவோம். கருசியவற்றைத் தற்போது விடுவிய பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர.

அவர் மேலும் தெரிவிக்கையில்:- தேசிய பாதுகாப்பை சில்லறைத்தனமாகக் கருதக்கூடாது. தேசிய பாதுகாப்புக்கே கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு நிமித்தமே பலாலி விமான நிலையத்தைச்சூழ பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டுவருகின்றன. இராணுவ முகாம்கள் நீக்கப்பட்டுள்ளன. இராணுவ வீதித்தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன. தமிழ்ப் பிரிவினைவாத
அரசியல்வாதிகளின் ஆதரவைப்பெறுவதற்காக தேசிய பாதுகாப்பைப் பணயம் வைக்கக்கூடாது. எமது ஆட்சியின் கீழ் படைகள் வசம் இருந்த காணிகள் மற்றும் வீடுகளில் 95 சதவீதமானவை மீளக்கையளிக்கப்பட்டன. பாதுகாப்பு நிமித்தமே எஞ்சிய 5 சதவீதம் வைக்கப்பட்டன. வழங்கக்கூடிய உச்சத்தை வழங்கிவிட்டோம். எனவே, எஞ்சியதை வழங்க முற்படுவது தேசிய பாதுகாப்பை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டுவரும் நடவடிக்கையாகும் – என்றார்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version