இலங்கை

கீரிமலை ஜனாதிபதி மாளிகை; காணிக்கு அனுமதிபெறவில்லை

Published

on

கீரிமலை ஜனாதிபதி மாளிகை; காணிக்கு அனுமதிபெறவில்லை

நகர அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம், கீரிமலையில் ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ள காணிகளுக்கு உரியவகையில் அனுமதிபெறப்படவில்லை என்று நகர அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவர் குமுதுலால் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ள காணிக்கு சட்டபூர்வ அனுமதிபெறப்படவில்லை. நாம் இந்தக் காணிகளுக்கு சட்டபூர்வ அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் காணிக்குரிய சட்டபூர்வ அனுமதியைப் பெற்றுவிடுவோம். அதன்பின்னர் மக்களுக்குப் பயனுள்ள வகையில் ஜனாதிபதி மாளிகையைப் பயன்படுத்துவோம் – என்றார்.

இந்த ஜனாதிபதி மாளிகை மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலத்தில் மக்களின் காணிகளைக் கையகப்படுத்தி 3.5 பில்லியன் ரூபா செலவில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version