இலங்கை
சிறையில் புத்தகம் எழுத தயாராகும் விமல் வீரவங்ச
சிறையில் புத்தகம் எழுத தயாராகும் விமல் வீரவங்ச
தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடக சந்திப்பில் பேசிய விமல் வீரவங்ச,
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், ஒரு வர்த்தக நிலைய விற்பனை தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறினார்.
இதற்கமைய, அந்த விசாரணை நீதிமன்ற வழக்குடன் நேரிடும் என்பதால் ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும், புதிய திகதியை ஆணைக்குழு விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறைத்தண்டனை விதிக்கப்படும் சாத்தியமான சூழ்நிலைகளைப் பற்றியும் விமல் வீரவங்ச கருத்து வெளியிட்டார்.
கடந்த சிறைவாசத்தின் போது, இரண்டு புத்தகங்களை எழுதியதுடன், ஐந்து ஓவியங்களில் மூன்றை முடித்ததையும், இரண்டும் முழுமையடையவில்லை என்பதையும் அவர் பகிர்ந்தார்.
மேலும் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டால், அந்த நேரத்தையும் பயனுள்ள வகையில் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.