உலகம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதிய வியட்நாம் ஏர்லைன்ஸ்; நான்கு விமானிகள் இடைநீக்கம்!

Published

on

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதிய வியட்நாம் ஏர்லைன்ஸ்; நான்கு விமானிகள் இடைநீக்கம்!

வியட்நாமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மற்றொரு விமானம் மோதியுள்ளது.

ஹனோயில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானங்களே இவ்வாறு மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த விபத்தில் போயிங் 787 விமானமும் ஏர்பஸ் ஏ321 விமானமும் மோதிக்கொண்டன. போயிங் 787 விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையை நெருங்கிக் கொண்டிருந்த போது, ​​ ஏ321 விமானத்துடன் மோதியது. போயிங் விமானத்தின் வலது இறக்கை ஏர்பஸ் ஏ321 விமானத்துடன் மோதியது. இந்த மோதலின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. விபத்தில் பயணிகள் அல்லது பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வியட்நாம் ஏர்லைன்ஸ் நான்கு விமானிகளையும் இடைநீக்கம் செய்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version