இலங்கை

படையினரைக் காப்பாற்ற ஜெனிவா செல்லத்தயார்!

Published

on

படையினரைக் காப்பாற்ற ஜெனிவா செல்லத்தயார்!

ஜெனிவாவில் இடம்பெற்றவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில், இலங்கையின் சார்பில் கலந்துகொள்ளத் தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-
உணவு, மருந்து விநியோகங்கள் தடுக்கப்பட்டமை உட்பட இலங்கை தொடர்பான 8 போர்க்குற்றச்சாட்டுகள் போலியானவை என்பதை நாம் ஜெனிவா தொடரில் நிரூபித்துள்ளோம். உரிய வகையில் ஆவணங்களும் கையளிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனிவாக் கூட்டத்தொடர் ஆரம்பமாகின்றது. இதன்போது இலங்கை தொடர்பான போர்க்குற்றச்சாட்டுகளை வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டும். ஜெனிவா விவகாரம் தொடர்பில் அனுபவமுள்ள அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சில் இருக்கின்றனர்.

Advertisement

எனினும், ஆனால் 46/1 தீர்மானத்தின் பாரதூரத்தன்மை தற்போதைய அரசாங்கத்துக்கு புரியவில்லை போல் தெரிகின்றது. அரசாங்கத்துக்கு எதிராகச் சாட்சியங்களைத் திரட்டும் நடவடிக்கை கூட தற்போது இடம்பெறுகின்றது – என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version