இலங்கை

புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; தாய், மகள் படுகாயம்!

Published

on

புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; தாய், மகள் படுகாயம்!

வவுனியா ஓமந்தை பறநாட்டான்கல் பகுதியில் இன்று காலை 9.30மணியளவில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் ஏ9 வீதியிலிருந்து பறநாட்டான்கல் வீதிக்கு ஏற முற்பட்ட வேளை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

Advertisement

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் 20 நிமிடங்கள் தாமதத்துடன் புகையிரம் கொழும்பு நோக்கி பயணித்தது.

விபத்து இடம்பெற்ற இப்புகையிரத கடவை ஒர் பாதுகாப்பற்ற புகையிரத கடவையாகும் என்பதுடன் எச்சரிக்கை பாதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version