இலங்கை
புதைகுழிக்குள் பொம்மை!
புதைகுழிக்குள் பொம்மை!
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நேற்று சிறுகுழந்தைகளின் விளையாட்டுப்பொம்மையொன்றும் மீட்கப்பட்டுள்ளது. பாடசாலைப் புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட சிறிய பிள்ளையினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனிதச் சிதிலத்துக்குக் கீழேயே அந்தப் பொம்மையும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிறு பெண்குழந்தைகள் பயன்படுத்தும் காலணியும் இந்தச் சிதிலத்துக்கு அருக்கில் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், கண்ணாடி வளையல்களும் அந்த மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.