சினிமா

180 கோடி போட்டது வீணாகி போய்ச்சா.? – ‘கண்ணப்பா’ பட வசூலால் ஷாக்கான ரசிகர்கள்…!

Published

on

180 கோடி போட்டது வீணாகி போய்ச்சா.? – ‘கண்ணப்பா’ பட வசூலால் ஷாக்கான ரசிகர்கள்…!

2025 ஜூன் 27ஆம் தேதி பிரமாண்டமாக வெளியான ‘கண்ணப்பா’ திரைப்படம், இந்திய திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு கலைப்படைப்பாக காணப்பட்டது. எனினும், படத்தின் வசூல் நிலவரம் தற்போது அந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது.180 கோடி  என்ற வியக்கவைக்கும் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், வெளியாகி 5 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை வெறும் 27.45 கோடி மட்டுமே உலகளாவிய அளவில் வசூல் செய்துள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்திருந்தனர். குறிப்பாக, அக்‌ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால் ,காஜல் அகர்வால் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் இப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தனர்.இத்தகைய நட்சத்திரக் கூட்டணியுடன் உருவான படம். ஒரே வாரத்திற்குள் இந்தளவுக்கு குறைவான வசூல் சம்பாதித்திருப்பது திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கண்ணப்பா’ திரைப்படம், தெலுங்கு சினிமாவைத் தாண்டி, பான் இந்தியா ரேஞ்சில் உருவாக்கப்பட்ட புதிய முயற்சி. அத்தகைய படம் , பல்வேறு காரணங்களால் வசூலில் சரிவைக்  கண்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version