சினிமா
கீர்த்தி ரொம்பவே மாறிட்டாங்கப்பா..! பயங்கரமான லுக்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நடிகை!
கீர்த்தி ரொம்பவே மாறிட்டாங்கப்பா..! பயங்கரமான லுக்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நடிகை!
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் எனப் பல மொழித் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் மூலம் மீண்டும் ஒரு முறை ரசிகர்களை அதிர வைத்துள்ளார். அது ஒரு சாதாரண புகைப்படம் அல்ல…!இந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முற்றிலும் புதிய லுக்கில் தோன்றியுள்ளார். வித்தியாசமான உடை தேர்வு மற்றும் மேக்கப் என அனைத்துமே ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதுவும், வழக்கமான சினிமா லுக்குகளிலோ, பாரம்பரிய உடைகளிலோ இல்லாமல், இந்த முறை கீர்த்தி ஒரு அமானுஷ்ய லுக்கில் காட்சியளித்துள்ளார்.புகைப்படம் வெளியாகியதுமே ரசிகர்கள் கமெண்ட் பகுதியில், “கீர்த்தி வில்லியா வரப்போறாங்களா?” என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டோ வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகளவான லைக்கினையும் பெற்றுள்ளது.