இந்தியா

நிலச்சரிவில் சிக்கிய 40 யாத்ரீகர்கள் பத்திரமாக மீட்பு!

Published

on

நிலச்சரிவில் சிக்கிய 40 யாத்ரீகர்கள் பத்திரமாக மீட்பு!

உத்தரகண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 40 பேரை மீட்புபடையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கேதார்நாத் தாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், யாத்ரீகர்கள் 40 பேர் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர்.

Advertisement

இதையடுத்து, சிக்கித் தவித்த, பக்தர்கள் 40 பேரை மாநில பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். பல பகுதிகளில், சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அக்ரகால், சம்பா, ஜாகிந்தர் மற்றும் துக்மந்தர் போன்ற பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version