சினிமா
அப்பா இல்லாத வாழ்க்கை, ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம்…!நேர்காணலில் மனம் திறந்த அன்ஷிதா..!
அப்பா இல்லாத வாழ்க்கை, ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம்…!நேர்காணலில் மனம் திறந்த அன்ஷிதா..!
தமிழ் மற்றும் மலையாள சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார் அன்ஷிதா. இவர் பல சீரியகளிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அன்ஷிதா மற்றும் அவருடைய அம்மாவும் சேர்ந்து சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது . அன்ஷிதாவின் அம்மா நேர்காணலில் கூறும் போது “13 வயதில் காதலித்து திருமணம் செய்த பெண், 17-வது வயதிலேயே இரு குழந்தைகளின் தாயாகினார். 20-வது வயதில் விவாகரத்து. அதற்குப்பின் வாழ்க்கையின் முழுப் பொறுப்பையும் தனியாக ஏற்று, துபாய், பஹ்ரைன், கத்தார் என பல்வேறு நாடுகளில் வேலை செய்து மக்களை வளர்த்தார். வாட்டர் பார்க் டெக்னீஷியனாக பணியாற்றிய அவர், மாதம் 55,000 சம்பளத்தில் இருந்து ஒரு சிறிய தொகையையே மகளுக்காக இந்தியா அனுப்பிக் கொண்டிருந்தார்”.மேலும் அன்ஷிதா கூறும் போது “என் அம்மா தான் என் பக்கம் இருந்தது. என் பயணமும் வெற்றியும் அவரால் தான்,” என கூறியிருந்தார். தன் வாழ்க்கையில் ஏற்பட்ட நெகட்டிவிட்டிகள், தவறான நட்புகள் மற்றும் நம்பிக்கையின் ஏமாற்றங்களை மிக உண்மையோடு பகிர்ந்தார்.மேலும் அவருடைய அம்மா கூறும் போது என் கணவர் நல்லவர் தான். எங்களுக்குள் ஒத்துபோகாத நிலைதான் பிரிவுக்கு காரணம். அவரைப் பற்றி எந்தக் குறையும் பிள்ளைகளுக்கு சொல்லவே இல்லை. இன்று அவர் வேறு குடும்பத்தில் வாழ்ந்தாலும், எங்கள் உறவு மரியாதையோடு தொடர்கிறது.” என்று கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் அன்ஷிதா ஒரு சம்பவத்தை கூறியிருந்தார் அதில் அவர் “நான் ஒரு ரிலேஷன் ஷிப்பில் உடைந்து சோர்ந்த போது, அம்மா தான் என்ன திரும்ப அழைத்தவர். என் நண்பர்களிடமே சென்று ‘அவளுக்கு உண்மையான அன்பு இல்லை, விட்டு வா’ என்று சொல்லியவர்.” மேலும் மிக பெரிய மனஅழுத்தத்தில் இருந்து என்னை வெளியே கொண்டு வந்தவர்கள் என்று கூறியிருந்தார் . மேலும் அவர்களின் உறவு,குணம், சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. உண்மையான பாசமும், தியாகமும் நிறைந்த வாழ்வில் “ஒரு சிங்கிள் அம்மா குழந்தைகளை தன் உயிராக வளர்க்கும் போது, தைரியமும், நம்பிக்கையும் மட்டும் தான் உயிர் நாழிகை” என்று கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.