சினிமா
என்னவோ போ!! மனக்குமுறலை கொட்டித்தீர்க்கும் ஆர்த்தி ரவி..
என்னவோ போ!! மனக்குமுறலை கொட்டித்தீர்க்கும் ஆர்த்தி ரவி..
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ரவி மோகன், கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் குறித்து ரவி மோகனும் ஆர்த்தியும் மாறிமாறி தங்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.கடந்த சில வாரங்களுக்கு முன் இருவருக்கும் சமரச விவாகரத்து பேச்சுவார்த்தை நடந்தது. இதனைதொடர்ந்து ஜீவனாவம்சம் வேண்டும் என்று மாதம் 4 லட்சம் கேட்டிருந்தார் ஆர்த்தி.இந்நிலையில், ஒரு பக்கம் ரவி மோகன், பெண் தோழியுடன் பல விஷயங்களை செய்து வரும் நிலையில் ஆர்த்தி ரவி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பதிவுகளை பகிர்ந்து புலம்பி வருகிறார்.ஆர்த்தி மற்றும் அவரின் தாய், இரு மகன்களோடு நடிகை குஷ்பூவின் மகள், எங்க இருக்கோம்? எங்கயோ இருக்கோம் ஆர்த்தி அக்கா என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். இதனை ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோர்யில் ”என்னவோ போ” என்று குறிப்பிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், இரு மகன்களையும் தனியாக ஆளாக்குவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம், அதை நினைக்கும் போது யாருக்குத்தான் கஷ்டமாக இருக்காது என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.