இலங்கை
கிருமித்தொற்றால் முதியவர் பலி!
கிருமித்தொற்றால் முதியவர் பலி!
கோப்பாய் தெற்கில் வசித்துவந்த முதியவர் ஒருவர், கிருமித்தொற்று ஏற்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார். நடராஜா கேதீஸ்வரநாதன் (வயது-75) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
ஜேர்மனியைச் சேர்ந்த அவருக்கு அண்மையில் இருதய அறுவைச் சிகிச்சை இடம்பெற்றுள்ளது. ஓய்வு காலத்துக்காக யாழப்பாணத்துக்கு வந்திருந்த நிலையிலேயே திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனையின்போது அடையாளம் காணப்படாத கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்ஸ்ரன் தயான அன்ரலா மேற்கொண்டார்.