இலங்கை
குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!
குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்கு கூவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலில் வீழ்ந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது. சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணை மேற்கொண்டார்.