இலங்கை
கொழும்பு மாணவி டில்சி அம்ஷி விசாரணையை துரிதப்படுத்த கோரி பேரணி
கொழும்பு மாணவி டில்சி அம்ஷி விசாரணையை துரிதப்படுத்த கோரி பேரணி
கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள தொடர்மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி டில்சி அம்ஷிகாவின் மரணம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்று (3) அமைதிவழிப் பேரணியொன்று நடத்தப்பட்டது.
இந்தப் பேரணி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு, கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
கடந்த மே மாதம் பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்ற டில்சி அம்ஷிகா என்ற மாணவி கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடியில் இருந்து கீழே குதித்து உயிர்மாய்த்தமை குறிப்பிடத்தக்கது.