இலங்கை

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் முகமாக பொலிசாருக்கான கருத்தரங்கு!

Published

on

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் முகமாக பொலிசாருக்கான கருத்தரங்கு!

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலிசாருக்கான கருத்தரங்கு ஒன்று நேற்று ) (02.07) இடம் பெற்றது.

 யாழ்ப்பாணம்,
காங்கேசன்துறை, கிளிநொச்சி ஆகிய பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கான செயலமர்வு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களை தடுத்து வைத்தல், விசாரனை செய்தல்,
தொடர்பான சட்ட ரீதியான விடயங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி ஜிகான் குணதிலக தலைமையில் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

 வடமாகாண மனித உரிமைகள் இணைப்பாளர்
த. கனகராஜ் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி இடம் பெறும் வேளையில் பொலிசாருக்கு இவ்வாறான செயலமர்வு இடம்பெற்றமை முக்கிய அம்சமாகும்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version