இலங்கை

சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு : திருமணமானதால் சந்தேகநபர் விடுதலை

Published

on

சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு : திருமணமானதால் சந்தேகநபர் விடுதலை

  14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரொருவரை காலி மேலதிக நீதவான் பூர்ணிமா பரணகம விடுதலை செய்துள்ளார்.

சந்தேகநபர் அப்பெண்னை திருமண செய்ததால் நீதிம்ன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.

Advertisement

இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவம் 2020 ஆம் ஆண்டில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற ஆண்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயதும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 17 வயதும் ஆகும்.

இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வழக்கு அண்மையில் காலி மேலதிக நீதவான் பூர்ணிமா பரணகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இருவரதும் திருமண சான்றிதழை பரிசோதித்து பார்த்த நீதவான் குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version