உலகம்

தாய்லாந்தில் மீன்சாப்பிட்ட ஒருவருக்கு நேர்ந்த துயரம்!

Published

on

தாய்லாந்தில் மீன்சாப்பிட்ட ஒருவருக்கு நேர்ந்த துயரம்!

தாய்லாந்தை சேர்ந்தவர் சூரியன். இவரது மனைவி(45) ஆசையாக மீன் சூப் வாங்கி பருகியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது தொண்டையில் மீன்முள்ளை விழுங்கியதில் அது சிக்கியுள்ளது.

 இதனால் வலி ஏற்பட்டு, அதிகப்படியான உணவுகளை சாப்பிட்டு மீன் முள்ளை வெளியே தள்ள முயன்றார். வாழைப்பழத்தையும் சாப்பிட்டு பார்த்தார். தனது விரலை வாயிற்குள் செலுத்தி வாந்தி எடுக்க முயன்று எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை. 

Advertisement

 மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் தொண்டையில் மீன் முள் எதுவும் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து வலியுடன் 2 வாரங்கள் கழிந்த நிலையில் அவரது கழுத்தில் கடும் வலி ஏற்பட்டுள்ளது.

மேலும், தொண்டையில் சிக்கிய மீன் முள் கழுத்தை குத்தி கிழித்து தோளின் மேல்புறம் வந்திருப்பதை அறிந்துள்ளார். 

Advertisement

இதனையடுத்து உடனே மருத்துவமனைக்கு சென்றதில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து மீன் முள்ளை அகற்றியுள்ளனர். 

 இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் சூரியன் தனது முகநூல் பக்கத்தில், ‛‛சின்ன ஒன்று சீரியஸான பாதிப்பை ஏற்படுத்தலாம். மீன் சாப்பிடும்போது மக்கள் கவனமாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு கூட போகலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version