இலங்கை
பல்லாயிரம் பக்தர்களின் பங்கேற்புடன் மருதமடு அன்னைக்கு நேற்றுப் பெருவிழா!
பல்லாயிரம் பக்தர்களின் பங்கேற்புடன் மருதமடு அன்னைக்கு நேற்றுப் பெருவிழா!
மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடிமாதப் பெருவிழா பல்லாயிரம் பக்தர்களின் பங்கேற்புடன் நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், மன்னார் மறை மாவட்ட ஓய்வுநிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குருநாகல் மறை மாவட்ட ஆயர் அந்தோணி பெரேரா ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருவிழாத் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூபப் பவனி இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து மடு அன்னையின் ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்தைத் தொடர்ந்து நவநாள் ஆராதனைத் திருப்பலிகள் இடம்பெற்று நேற்று திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை நற்கருணைப் பெருவிழா இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.