சினிமா

பொண்ணு வாழ்க்கையே நாசமா போச்சு.. புலம்பி திரியும் பாக்கியா! முகமூடியை கழட்டிய சுதாகர்.!

Published

on

பொண்ணு வாழ்க்கையே நாசமா போச்சு.. புலம்பி திரியும் பாக்கியா! முகமூடியை கழட்டிய சுதாகர்.!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட அந்த சுதாகர் எப்புடி எல்லாம் நடிச்சாரு தெரியுமா என்று சொல்லி அழுகுறார். இதனை அடுத்து அவ்வளவு பெரிய கிரிமினலுக்கா நம்ம பொண்ண கல்யாணம் பண்ணி வைச்சிருக்கிறோம் என்று கோபமாகச் சொல்லுறார். பின் இனியா நிதீஷ் என்னை பிடிச்சுப் போய்த் தான் பொண்ணு பார்க்க வந்தாருனு சொன்னது எதுவுமே உண்மையில்ல என்கிறார்.மேலும் ஹோட்டலை வாங்கணும் என்றதுக்காக மட்டும் தான் அவர் கல்யாணம் பண்ணினார் என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து பாக்கியா என்ர பொண்ணோட வாழ்க்கையே போயிடுச்சு என்கிறார். மேலும் நீங்க எல்லாரும் சேர்ந்து என்ர பொண்ணோட வாழ்க்கையை கெடுத்திட்டீங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து பாக்கியா இனியாவைப் பாத்து உனக்கு நிதீஷ் மேல சந்தேகம் வந்த உடனே என்கிட்ட சொல்லியிருக்கணும் என்கிறார்.மேலும் என்னோட ரெஸ்டாரெண்ட் விஷயத்தில கை கட்டிபாத்துக் கொண்டிருந்த மாதிரி இனியா விஷயத்திலயும் இருப்பன் என்று நினைச்சிட்டினம் போல என்று கோபமாகச் சொல்லுறார். இதனைத் தொடர்ந்து பாக்கியா சுதாகர் வீட்ட வந்து இப்பதான் உங்கட பையனோட பழக்கவழக்கம் எல்லாம் தெரிய வந்திருக்கு என்று சொல்லுறார். அத்துடன் எதுக்காக உங்க பையன என்ர பொண்ணுக்கு கட்டிக் கொடுத்து அவளை கஷ்டப்படுத்துறீங்க என்று கேட்கிறார்.பின் சுதாகர் பணக்கார வீட்டுப் பசங்கன்னா இப்புடித் தான் இருப்பாங்க என்கிறார். இதனை அடுத்து சுதாகர் மனைவி உங்க பொண்ணு மட்டும் நல்லவளா அவள் முன்னாள் காதலனோட சேர்ந்து கூத்தடிச்சது எல்லாம் சரியா என்று கேட்கிறார். அதுக்கு பாக்கியா வாயை மூடுங்க என்று சொல்லுறார். மேலும் என்ர பொண்ண பத்தி இன்னொரு வார்த்தை தப்பா கதைச்சால் அவ்வளவு தான் என்கிறார். பின் சுதாகர் நீங்க பண்ணுறதை பண்ணுங்க என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version